தொற்று பரவலை தடுக்க புதிய நடைமுறை

தீவிர சிகிச்சைப் பிரிவு உட்பட மருத்துவமனை அறைகளை எதிர்மறை அழுத்தங்கொண்ட தனிமைப்படுத்தும் அறைகளாக மாற்ற, சிங்கப்பூர் பொது மருத்துவமனை புதிய நடைமுறைகளை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் சில மணி நேரத்திலேயே ஏற்படுத்தப்படும் மருத்துவமனையின் நோயாளி படுக்கை அறைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு அறைகள், அறுவை சிகிச்சை அறைகள் ஆகியவை தொற்று நோயாளி களைத் தனிமைப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுவிடும்.

மருத்துவமனையில் உள்ள நோயாளி படுக்கை அறை அல்லது தீவிர சிகிச்சை அறை ஆகியவற்றின் நுழைவாயிலின் பின்பக்கத்தில் இந்த 70 கிலோ எடையுடைய ‘எஸ்ஜி-ஸ்பார்க்’ அமைப்புமுறை பொருத்தப்படுகிறது.

நுழைவாயிலுக்கும் பொருத்தப்பட்ட அமைப்புமுறைக்கும் இடைவெளி இல்லாததை உறுதி செய்ததை அடுத்து காற்றை வடிகட்டும் அதிக செயல்திறனுடைய சாதனம் ஒன்று இயக்கப்படும்.
இச்சாதனம் எதிர்மறை அழுத்தமுடைய சுற்றுச்சூழலை நோயாளியின் அறையில் உருவாக்கிவிடும்.

இதனால் கிருமித்தொற்றுடைய துளிகளோ காற்றோ அறையிலிருந்து வெளியேற முடியாது. மருத்துவமனை அறையின் நுழைவாயிலில் ஒன்று, நோயாளியை நோக்கியவாறு அமைந்த இன்னொன்று என இந்த அறையில் இரண்டு கதவுகள் உண்டு.
மடக்கக்கூடிய தன்மை கொண்ட இந்த ‘எஸ்ஜி-ஸ்பார்க்’ வசதி, தொற்று நோயாளிகளைக் கொண்ட ஒரு படுக்கை அல்லது பல படுக்கை அறைகளில் பொருத்தப்படலாம். ஒவ்வொரு அமைப்புமுறையையும் உருவாக்க இரண்டு வாரங்கள் எடுக்கின்றன. அதைப் பொருத்த கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடிக்கிறது.அதே ‘எஸ்ஜி-ஸ்பார்க்’ அமைப்புமுறையின் மற்றொரு வகை, அறுவை சிகிச்சை இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. 150 கிலோ எடையுடைய இதை இரண்டு மணிநேரத்தில் பொருத்தி முடிக்கலாம்.

இதில் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கான கட்டில், ‘வெண்டிலேட்டர்’ சாதனம் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நுழையக்கூடிய இட வசதி உள்ளது.

தொற்று நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை நடக்கும்போது கிருமித்தொற்றுத் துளிகள் வெளியேறுவதை இந்த அமைப்புமுறை தடுத்திடும்.தொடர்பு இல்லாத உணர்கருவிகள், காற்றை வடிகட்டுவதில் கூடுதல் ஆற்றல் போன்ற உயர்தர அம்சங்களால் இவ்வகை அமைப்புமுறைகளில் முதலாவதாக விளங்குகிறது இந்த ‘எஸ்ஜி-ஸ்பார்க்’.

பொதுவாக அறுவை சிகிச்சை செய்யும் இடத்தின் காற்று, ஒரு மணி நேரத்தில் 12 முறை வடிகட்டப்படும். ஆனால் இப்படி பொருத்தப்பட்ட ஓர் அறையில் அதே ஒரு மணி நேரத்தில் காற்று 300 முறை வடிகட்டப்படும் என்று கூறப்பட்டது.

தனிமைப்படுத்தும் அறைகளை உருவாக்க பணமும் நேரமும் அதிகம் செலவாகும். ஆனால் ‘எஸ்ஜி-ஸ்பார்க்’ அமைப்புக்கான கட்டணம் அதில் பாதி என்று தெரிவிக்கப்பட்டது.
இப்புதிய அமைப்புமுறையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மருத்துவமனைகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!