கிருமிப் பரவல் தடுப்பில் தோல்வி: உலக சுகாதாரக் குழு அதிருப்தி

படம்: ராய்ட்டர்ஸ்

உல­க­ள­வி­லான கொரோனா கிரு­மிப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்கை குறித்து உலக சுகா­தார நிறு­வ­னக் குழு அதி­ருப்தி தெரி­வித்து உள்­ளது. அர­சாங்­கங்­களும் பொது சுகா­தார அமைப்­பு­களும் எந்த அள­வுக்கு மெது­வா­க­வும் பய­னற்ற வகை­யி­லும் செயல்­பட்­டன என்­பதை அக்­குழு தனது அறிக்­கை­யில் சுட்­டி­யுள்­ளது.

ஆண்­டாண்டு கால­மாக விடுக்­கப்­பட்ட எச்­ச­ரிக்­கை­களை உலக நாடு­கள் கண்­டு­கொள்­ள­வில்லை என்று அது குறிப்­பிட்டு உள்­ளது.

கொள்­ளை­நோய் ஆயத்­த­நிலை மற்­றும் சமா­ளிப்­புக்­கான சுயேச்சை குழு நேற்று தனது இடைக்­கால அறிக்­கையை வெளி­யிட்­டது.

“அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து, ஒட்­டு­மொத்த திறன்­களை வெளிப்­ப­டுத்தி மனி­த­குல பாது­காப்பு வலையை ஏற்­ப­டுத்­தத் தவறி­ விட்­டோம். பாது­காப்­புச் சாத­னங்­க­ளைப் பெறு­வ­திலோ பர­வ­லான தொடர்பு தட­ம­றி­த­லிலோ அர­சாங்­கங்­கள் திற­னற்ற வகை­யில் செயல்­பட்­டன. இது­போன்ற பல தோல்­வி­கள் நிகழ்ந்து உள்­ளன,” என்று அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

பாது­காப்­புக்­குப் பொறுப்­பேற்று வழி­ந­டத்த வேண்­டி­ய­வர்­கள் அவற்­றைச் செய்­யத் தவ­றி­விட்­ட­தா­க­வும் குழு தனது மதிப்­பீட்­டில் கூறி­யுள்­ளது.

கொரோனா கிரு­மிப் பர­வல் விதம் குறித்து விசா­ரிக்க அமைக்­கப்­பட்ட இந்த சுயேச்­சைக் குழு­வுக்கு முன்­னாள் நியூ­சி­லாந்து பிர­த­மர் திரு­வாட்டி ஹெலன் கிளார்க், முன்­னாள் லைபீ­ரிய அதி­பர் திரு­வாட்டி எலன் ஜான்­சன் சர்­லீஃப் ஆகி­யோர் தலை­மை­யேற்று உள்­ள­னர்.

நோய்ப் பர­வல் தொடர்­பான தனது அணு­கு­மு­றை­களை உல­கம் மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டும் என அறிக்கை கேட்­டுக்­கொண்டு உள்­ளது. ஒரு தோல்வி மற்­றொரு தோல்­விக்கு வழி­வ­குப்­ப­தா­கத் தெரி­வித்து உள்ள அறிக்கை, ‘மெது­வான, சிக்­க­லான, உறு­தி­யற்ற நிலை­யில்’ கொள்­ளை­நோய் விழிப்­பு­மு­றை­யில் தொடங்கி பல்­லாண்டு கால தயார்­நி­லைத் திட்­டங்­கள் செயல்­ப­டுத்த இய­லா­மல் போனது வரை தோல்­வி­கள் நிகழ்ந்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளது. உலக அர­சாங்­கங்­க­ளின் சமா­ளிப்­புத்­தன்மை பொருத்­த­மற்­ற­தா­க­வும் தடங்­கல் நிறைந்­த­தா­க­வும் அறிக்கை மேலும் சுட்­டி­யது.

பொது சுகா­தார அதி­கா­ரி­க­ளி­டம் தடு­மாற்­றம் காணப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்த குழு, அனைத்­து­லக சுகா­தார அவ­ச­ர­நி­லையை அறி­விக்க உலக சுகா­தார நிறு­வ­னக் குழு ஜன­வரி 30 வரை ஏன் காத்­தி­ருக்க வேண்­டும் என்று கேள்வி எழுப்பி உள்­ளது.

“பர­வக்­கூ­டிய கொள்­ளை­நோய் என்­பது தவிர்க்க முடி­யா­தது என்­ப­தற்­கான முன்­னு­ரைப்­பு­கள் காலம் கால­மாக செய்­து­வந்த நிலை­யி­லும் அவ­ச­ர­நி­லைக்­காக உலக சுகா­தார நிறு­வ­னத்­தைத் தயார்ப்­ப­டுத்­தும் நோக்­கில் பல்­வேறு உயர்­மட்­டக் குழுக்­கள் பல கால­மாக ஏற்­ப­டுத்­தப்­பட்டு வந்­த­போ­தி­லும் மாற்­றங்­கள் மெது­வா­கத்­தான் நிகழ்­கின்­றன. இருந்­த­போ­தி­லும் உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தடு­மாற்­றங்­கள் மீண்­டும் மீண்­டும் தவ­றி­ழைக்­கும் உல­கத் தலை­வர்­க­ளின் செயல்­களை நியா­ய­ப்படுத்திவிடாது.

“சுகா­தார அதி­கா­ரி­கள் மிகத்­தெ­ளி­வாக சமிக்ஞை காட்­டி­ய­

போ­தி­லும் அவை கண்­டு­கொள்­ளப்­ப­ட­வில்லை. அறி­கு­றி­யற்ற மக்­க­ளி­டம் இருந்து புதிய வகை கொரோனா கிரமி பர­வும் என்­ப­தற்­கான ஆதா­ரங்­களை முன்­கூட்­டியே கண்­ட­றி­வ­தில் பொது சுகா­தார மேல்­மட்ட அதி­கா­ரி­கள் மெத்­த­னம் காட்­டி­னர்.” என்று அறிக்கை குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!