'ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு கொவிட்-19 அலையை எதிர்பார்க்கலாம்'

இன்று நடந்த அமைச்சுகள் நிலை பணிக்குழு செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதார அமைச்சர் ஓங் யீ காங். படம்: தகவல் தொடர்பு அமைச்சு

ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு கொவிட்-19 அலையை எதிர்ப்பார்க்கலாம் என்று அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.

சிங்கப்பூரில் 10ல் 7 பேருக்கு ஏற்கெனவே கொவிட்-19 தொற்று பாதித்துவிட்டது. அடுத்த கொவிட்-19 அலையில் மீண்டும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோர் அதிகமாக இருப்பார்கள் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.

சிங்கப்பூரில் கொவிட்-19 தற்போது தணிந்து சிங்கப்பூரர்கைளிடையே எதிர்ப்புச்சக்தி முன்பைவிட தற்போது அதிகமாக இருந்தாலும் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு கொவிட்-19 அலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஓங் அறிவுறுத்தினார்.

அப்போது கொவிட்-19 அலை தற்போதைய பிஏ.5 ஒமிக்ரான் திரிபுவாக இருக்கலாம் அது வேறு ஒரு திருபுவாகவும் இருக்கக்கூடும் என்று அமைச்சர் விளக்கினார்.

தொற்று பாதிப்பினால் எற்படும் எதிர்ப்பு சக்தி நாளடைவில் வலு இழந்து போகும் என்றும் அதனால் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கையைச் சுகாதார அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றும் திரு ஓங் தெரிவித்தார்.

எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் நோய் தொற்றும் சாத்தியம் கொவிட்-19 தொற்றியவர்களிடயே 5% தான் என்று தரவுகள் தெரிவிப்பதாக அமைச்சர் சுட்டினார்.

#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!