ராகுல் காந்தி நேரில் முன்னிலையாக குஜராத் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அவதூறு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த மாதம் 27ஆம் தேதி நேரில் முன்னிலையாக வேண்டும் என்று குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது குஜராத்தின் அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.750 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் முறைகேடாக மாற்றப்பட்டதாக ராகுல் காந்தியும் காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலாவும் குற்றம் சாட்டியிருந்தனர். அப்போது இந்த வங்கியின் இயக்குநராக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இருந்தார். தற்போது வங்கியின் இயக்குநராக உள்ள அஜய் படேல், ராகுல் காந்திக்கு எதிராக அஹமதாபாத் கூடுதல் தலைமை பெருநகர மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மே 27ஆம் தேதி ராகுல் காந்தியும் ரன்தீப் சுர்ஜேவாலாவும் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக இருவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon