கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் முதன்முறையாக வாக்குச்சாவடி

சென்னை: சென்னை கீழ்ப்பாக் கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் சுமார் 1,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
உறவினர்களால் கைவிடப்படு வோர், சிகிச்சை முடிந்து குணம் அடைந்த பிறகும் இந்த மருத்துவ மனையிலேயே தங்கி உள்ளனர். அவர்களுக்குப் பலவித தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 
குணமடைந்தும் வீடுகளுக்குச் செல்லாமல் அந்த மருத்துவமனை யிலேயே தங்கி இருப்போரும் தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என்பதற்காக மருத்துவமனையின் இயக்குநர் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டார். 
அந்த முயற்சிகளின் பலனாக மருத்துவமனையில் தங்கி இருக் கும் 192 பேரை வாக்காளர் பட்டிய லில் சேர்த்து அவர்கள் வாக்களிக் கும் உரிமை பெறப்பட்டது. 
இதனால் இப்போது மனநல மருத்துவமனையில் வாக்குப்பதிவு மையம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 
மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்த பயிற்சியை       யும் அதிகாரிகள் அவர்களுக்கு அளித்தனர். 
இத்தேர்தலில் இங்கு முதன் முறையாக வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு, குணம் அடைந்த வாக்காளர்கள் வாக்கு அளித்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற இருக்கிறார்கள் என்று இந்த மருத்துவமனை நிர்வாகம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon