ராகுலை எதிர்த்துப் போட்டியிடும் ஸ்மிரிதி இரானி வேட்புமனு தாக்கல்

அமேதி: உத்தரபிரதேசம் மாநி லத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஸ்மிரிதி இரானி நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்ன தாக அவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூசை நடத்தினார். 
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகி  றது. இந்நிலையில் அமேதி தொகுதியில் களம் காண்கிறார் ராகுல் காந்தி.
அவருக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் விதமாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கள மிறங்கி உள்ளார். 
இதையடுத்து அவர் நேற்று பாஜக தொண்டர்கள் புடைசூழச் சென்று, வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 
அவரது வாகனம் சென்ற வழி நெடுகிலும் தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக தேர்தலில் வெற்றி பெற வேண்டி, தமது கணவர் சுபீன் இரானியுடன் இணைந்து அவர் சிறப்புப்பூசை நடத்தினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon