சுடச் சுடச் செய்திகள்

அமமுகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு

தேனி: ஆண்டிப்பட்டியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத் தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி, பணத்தைத் திருடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஆண்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
தேனி மாவட்டம், ஆண்டிப் பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தியபோது அங்கு 50க்கும் மேற்பட்ட அமமுகவினர் திரண்டனர். அவர்கள் சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரி களுடன் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் அவர்களைச் சோதனை செய்யவிடாமல் தடுத்தனர். அத்துடன் அவர்கள்  அறைக்குள் புகுந்து பணத்தை அள்ளிச்செல்ல முயன்றனர். அத்துடன் தொடர்ந்து காவல் துறையினரிடம் தகராறு செய்து கொண்டிருந்த அவர்களை விரட்டுவதற்காக போலிசார் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட,  அமமுகவினர் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon