பொன்னமராவதி சம்பவம்: வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு போலிஸ் கோரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியிலும் சுற்றுவட்டாரத் திலும் பெரும் பதற்றம் ஏற்பட காரணமாக இருந்த ஒலிப்பதிவை வெளியிட்டவர் களைக் கண்டுபிடிக்க உதவும்படி வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு புதுக்கோட்டை போலிஸ் கடிதம் எழுதி இருக்கிறது. 
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தும் வகையில் இரண்டு பேர் பேசிக் கொள்வது போன்ற அந்த ஒலிப்பதிவு வாட்ஸ்அப்பில் பரவியதையடுத்து பெரும் போராட்டங்களும் வன்முறைச் சம்பவங் களும் வெடித்தன. 
இதன் தொடர்பில் 1,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பொன்னமராவதி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
அங்கு இயல்புநிலை திரும்பி வருவதாக வும் 80% பேருந்துகள் செயல்படுவதாகவும் நேற்று தகவல்கள் தெரிவித்தன. மது பானக் கடைகள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. 
வாட்ஸ்அப் ஊடகத்தில் ஒலிப்பதிவைப் புழக்கத்தில் விட்டது யார் என்பதைக் கண்டுபிடிக்க போலிஸ் பெரும் வேட்டை யைத் தொடங்கி இருக்கிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக கலிஃபோர்னியாவில் உள்ள வாட்ஸ்அப் நிறுவன தலைமையகத்திற்கு காவல்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதாக தெரிவிக்கப் பட்டாலும் அங்கு இன்னமும் போலிஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாவட்டத்தில் மொத்தம் 20 இடங்களில் சாலைகள் மறைக்கப்பட்டு போராட்டங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 
இதனிடையே, பொன்னமராவதி சம்ப வத்தைக் கடுமையாக கண்டித்த அரசாங் கம், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon