பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குஜராத்தில் வாக்களிப்பு

அகமதாபாத்: குஜராத்தின் 26 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி உள் ளிட்டோர் குஜராத் சென்றிருந்தனர்.

வாக்களிப்பதற்கு முன் தன் தாயாரைச் சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

அங்கிருந்து புறப்பட்ட அவர், ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப் பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் தனது வாக்கைப் பதிவு செய்ய முன்பே அங்கு வந்திருந்தார்.

இருவரும் மக்களோடு மக்க ளாக வரிசையில் நின்று தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.

வாக்களித்தபின் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மூன்றாவது கட்டத் தேர்தல் நடந்து வருகிறது. என் னுடைய சொந்த மாநிலத்தில் வாக்களிக்க இந்த முறை எனக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

"கும்பமேளாவில் புனித நீராடிய போது கிடைத்த மனநிறைவைப் போன்று, ஜனநாயகத் திருவிழா வான தேர்தலில் வாக்களித்தபின் எனக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

"தீவிரவாதத்தின் ஆயுதம் ஐஇடி எனும் வெடிகுண்டு, ஜன நாயகத்திற்கு வலிமை சேர்ப்பது வாக்காளர் அடையாள அட்டை. ஐஇடியைவிட மிகவும் சக்தி வாய்ந்தது வாக்காளர் அட்டை," என்றார் பிரதமர் மோடி.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் ஜுனகத் மாவட்டத் துக்குட்பட்ட கிர் வனப்பகுதியில் சிங்கங்களைப் பாதுகாக்கும் மிகப்பெரிய தேசிய பூங்கா அமைந் துள்ளது. இந்த வனப்பகுதிக்கு அருகாமையில் பாரத்தாஸ் பாப்பு என்பவர் வசித்து வருகிறார். அந்த மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாரத்தாஸ் பாப்பு என்ற ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.
பாரத்தாஸ் பாப்பு நேற்று இங்கு வந்து வாக்களித்தார்.

இதனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 100 விழுக்காடு வாக் குப்பதிவை கண்ட தனிப் பெருமை இந்த வாக்குச்சாவடி கிடைத் துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!