4 தொகுதி தேர்தல் களத்தில் பணபலத்துடன் படைபலம்

சென்னை: தமிழ்நாட்டில் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் நான்கு தொகுதிகளி லும் அதிமுகவும் திமுகவும் தங் களுடைய முழு படைபலத்தையும் களம் இறக்கி இருக்கின்றன.

இரண்டு கட்சிகளுமே பெரும் பணத்துடன் களமிறங்கி இருப்ப தாகப் பரவலாகப் புகார் தெரிவிக் கப்பட்டுவரும் நிலையில், அந்த நான்கு தொகுதிகளிலும் நீயா, நானா என்ற பாணியில் இரண்டில் ஒன்று பார்த்துவிட இந்த இரண்டு கட்சிகளும் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த நான்கு தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களில் ஒவ்வொரு 250 வாக்காளர்களையும் குறி வைத்து திமுக குறைந்தபட்சம் 16 மாவட்டத் தொண்டர்களைக் கள மிறக்கி இருக்கிறது. 

தேநீர் கடைகள் போன்ற இடங் களுக்கு அவர்கள் செல்லவேண் டும் என்றும் திமுகவுக்கு வாக்கு வேட்டையாடவேண்டும் என்றும் தொண்டர்களுக்கு மேலிடம் கட் டளையிட்டு இருக்கிறது. 

வடஇந்தியாவில் சில தொகுதி களில் பாஜக செய்ததைப் போல இப்போது திமுக தொண்டர்கள் செயல்படவேண்டும். 

காலையில் வீடுதோறும் போக வேண்டும். பிற்பகலில் தேநீர் கடை போன்ற பொது இடங்களுக்குச் செல்லவேண்டும் என்று  மேலிடம் கட்டளையிட்டு இருப்பதாக திமுக கட்சிக்காரர் ஒருவர் கூறினார்.

திமுக இப்படி எனில், ஆளும் அதிமுக கட்சி நான்கு தொகுதி களில் ஒவ்வொன்றிலும் 15 மாவட் டப் பிரிவுகளைக் களமிறக்கி அசத்தி வருகிறது. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon