சோனியா அழைப்பு: ஒன்றுகூடும் எதிர்க்கட்சித் தலைவர்கள்

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர் தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 23ஆம் தேதியே டெல்லியில் நடக்கும் ஆலோ சனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்க ளுக்கும் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து இருக்கிறது.

சோனியா காந்தி தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது. இம்முறை நாடாளுமன்­றத் தேர்தலின் முடிவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை எனப் பல் வேறு கருத்துக் கணிப்புகள் தெரி விக்கின்றன. மேலும் பல்வேறு அரசியல் ஆய்வாளர்களும்கூட இம்முடிவை ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் மாநிலக் கட்சி கள்தான் நாட்டின் அடுத்த பிரதமர் யாரென்பதை தீர்மானிக்கும் புதுச் சக்திகளாக உருவெடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அக்கட்சிகளின் தலைவர்களை அரவணைத்துச் செல்ல காங்கி ரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது.

வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சில மாநிலக் கட்சி கள் காங்கிரஸ் பக்கமும், சில கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவாக வும் உள்ளன. மாயாவதி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தனித்து நிற்கின்றனர். இதற்கிடையே மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய மூன்றாவது அணியை அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திர­சேகர ராவும், காங்கிரஸ், பாஜ அல்லாத புது அணியை உரு­வாக்க சந்திரபாபு நாயுடுவும் முயன்று வருகின்றனர்.

சந்திரசேகர ராவ் துணைப் பிரதமராக தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவரைத் தேர்வு செய்ய வலியுறுத்துவதாகத் தெரிகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே பிரதமர் யார் என்பதை முடிவுசெய்ய வேண்டும் என பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்­தும் நிலையில் சோனியா ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!