சுடச் சுடச் செய்திகள்

முதல்வர் பழனிசாமி: ஆட்சியை கவிழ்க்க கூட்டு சதி

சென்னை: சூலூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியைக் கவிழ்க்க கூட்டு சதி நடக்கிறது என்று தெரிவித்தார்.

சின்னியம்பாளையம், முத்துக் கவுண்டன்புதூர், வாகராயம் பாளையம் ஆகிய இடங்களில்  அதிமுக வேட்பாளர் வி.பி. கந்த சாமியை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

“ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு டிடிவி தினகரன் மூலமாக ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அந்த முயற்சி ஒரு போதும் பலிக்காது. 

“மக்கள்தான் நீதிபதிகள். அவர்கள் வாக்களித்தால்தான் வெற்றி பெற முடியும். அந்த வகை யில் 22 சட்டமன்றத் தொகுதி களிலும்   அதிமுக வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.

“அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கட் சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் கழகத்தின் கொறடா சம்பந்தப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் ஆதாரத் துடன் புகார் மனுவை சட்டமன்றத் தலைவரிடம் அளித் தார். 

“புகார் மனு கொடுத்த உடனே ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் திமுகவினர் சட்டப்பேரவைத் தலை வர் மீது நம்பிக்கை இல்லாத் தீர் மானத்தைக் கொண்டு வரு கிறார்கள். இதிலிருந்தே நன்றாக தெரிகின்றது. திமுகவிற்கும் சம் மந்தப்பட்ட இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்பது வெளிப் பட்டுள்ளது.

“திமுக தலைவருக்கும் சம் பந்தப்பட்ட இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்ன தொடர்பு? எங்கள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கழக கொறடா புகார் மனு அளிக்கின்றார், அதற்கு  திமுக தலைவர் ஏன் கொதிக்கிறார்? ஏன் ஆதங்கப்படுகிறார்? இதி லிருந்து உண்மை வெளிப்பட்டுள் ளது.  

திமுகவிற்கும் அமமுக விற்கும் என்ன தொடர்பு இருக் கின்றது என்பது வெட்ட வெளிச்ச மாகியுள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon