சந்திரபாபு பட்டியலில் அடுத்ததாக மம்தா

பாஜகவுக்கு எதிராகப் பெரும் கூட் டணி ஒன்றைத் திரட்டி வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பல தலைவர்களைச் சந் தித்து வருவதில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளார். அவ்வரிசை யில் நேற்று பிற்பகல் கோல்கத்தா வில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது கூட்டணி அமைப்பது குறித்து இருவரும் பேசியதுடன் சந்திரபாபு நாயுடு பல அரசியல் தலைவர்களுடன் நடத் திய சந்திப்புகளில் பெற்ற தகவல் களையும் மம்தா பானர்ஜியிடம் பகிர்ந்துகொண்டார்.

கடந்த மாதம் 11ஆம் தேதி அன்று தொடங்கிய மக்களவைத் தேர்தல், ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் வரும் வியாழக் கிழமை அன்று வாக்குகள் எண் ணப்படவுள்ளன.

இதற்கிடையே, பெரும்பான்மை இடங்கள் பாஜகவுக்கே கிடைக் கும் என்றும் அக்கட்சிதான் மீண் டும் ஆட்சி அமைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறி வரு கின்றன.

ஆனால் ஏழாம் கட்டத் தேர்தல் முடிவடைவதற்கு முன்பே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக அல்லாத ஒரு கூட்டணியை அமைப்பதில் மும்முரம் காட்டி வரு கிறார்.

இதற்காக காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தியுடன் இரண் டாவது முறையாகச் சந்திப்பு நிகழ்த்தியதுடன் ஐக்கிய முற்போக் குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரையும் சந்தித்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின் எடுக் கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து சந்திரபாபு நாயுடு ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

பாஜக கூட்டணிக்கு அமோக வெற்றி கிட்டும் என்ற கணிப்பு நிலவி வருவதற்கிடையே சந்திரபாபு நாயுடு ஏன் இவ்வாறு காரணமில்லாமல் அலட்டிக்கொள் கிறார் என்றும் அவரின் உற்சாகம் 23ஆம் தேதிவரை நீடிக்கட்டும் என்றும் கூறியுள்ளது பாஜகவின் மகராஷ்டிர நட்புக் கட்சியான சிவசேனா.

அதற்காக சந்திரபாபு நாயுடுவுக்கு தம் வாழ்த்துகளையும் சிவசேனா கட்சி தெரிவித்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க மாயாவதி டெல்லிக்கு வரப்போவ தில்லை என்று அவரின் பகுஜன் சமாஜ் கட்சி நேற்று தெரிவித்தது.

சந்திரபாபு நாயுடுவின் திட்டத் தின்படி ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்த பின்னர் பாஜக அல்லாத எதிர்க் கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து மாயாவதி பேசவுள்ளார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் டெல்லியில் மாயாவதி யாரையும் சந்திக்கும் திட்டமில்லை என்று அக்கட்சி பின்னர் தெரிவித்தது.

வாக்கு முடிவுகள் வந்த பின் னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாயாவதி முடிவெடுக்கக் காத்திருப்பதாகக் கட்சி வட்டாரங் கள் கூறுகின்றன.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு (இடது) சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவைச் சந்தித்துப் பேசினார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!