கருத்துக்கணிப்புகள் பொய்த்துப் போகும் என்கிறது காங்கிரஸ்

புதுவை: நாட்டில் 80 கோடி வாக்காளர்கள் இருக்கும் போது 5 அல்லது 6 லட்சம் வாக்காளர்க ளின் கருத்துக்களை மட்டும் கேட்டு கணிப்பு வெளியிடுவது சரியானதாக இருக்காது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று புதுவையில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், கடந்த காலங்களில் கருத்துக்கணிப்பு கள் பொய்த்துப் போயிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

"கடந்த காலத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மீண்டும் வெற்றி பெற்று அவரே பிரதமர் ஆவார் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அவர் தோல்வியடைந்தார்.

"2009ஆம் ஆண்டு மன் மோகன் சிங் தோல்வி அடைவார் என கருத்துக்கணிப்பு கூறியது. ஆனால் மன்மோகன்சிங் பிரதமர் ஆனார்," என்றார் நாராயணசாமி.

மேலும் பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒட்டி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் பொய்யாகிப் போன தாகச் சுட்டிக்காட்டிய அவர், கருத்துக்கணிப்புகளை மட்டும் வைத்து பொதுத்தேர்தல் தொடர் பாக எந்தவொரு முடிவையும் திட்டவட்டமாகச் சொல்ல இய லாது என்றார்.

கடந்த காலத்தைப் போலவே இந்த ஆண்டும் கருத்துக்கணிப்பு கள் பொய்த்து போகும் என்றும் நாராயணசாமி மேலும் தெரிவித் துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மை யுடன் வெற்றி பெறும் என்றும், மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் முடிவுகள் வந்துள்ளன.

இது குறித்து கருத்து தெரி வித்த போதே புதுவை முதல்வர் நாராயணசாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கிடையே கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பொய் யானவை என்று முன்னாள் மத் திய அமைச்சர் சசிதரூர் கூறி உள்ளார். எனவே எதிர்வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்காக தாம் காத் திருப்பதாகவும், கற்பனை எண்களை வைத்து விவாதிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!