ஓபிஎஸ் மகன் மீது வழக்கு

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 38 தொகுதி களில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. அந்த ஒரு தொகு தியே தேனி. இந்த தேனி மக்கள வைத் தொகுதியில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல் வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியை எதிர்த்து வழக்கு தொடுக்க உள்ளேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோ வன் தெரிவித்துள்ளார்.

தேனி தொகுதியில் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை மீண்டும் முழுமையாக எண்ணவேண்டும் என்று வழக்குத் தொடர உள்ள நிலையில், இதுகுறித்து வழக்கறி ஞர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, “தேனி தொகுதியில் நடந்த தேர்தலின்போது ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன. பல்வேறு தில்லுமுல்லுகளும் அரங் கேறியுள்ளன.

“பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ‘சீல்’ இல்லை.

“நான் தோற்றதற்கு பண பலம், அதிகார துஷ்பிரயோகமே கார ணம். தேனியில் வாக்காளர் களுக்கு அதிமுக பணம் கொடுத் தது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

“தன் மகன் ரவீந்திரநாத் வெல்லவேண்டும் என்பதற்காகத் தான் வாரணாசி சென்று ஓபிஎஸ் மோடியைச் சந்தித்தார்.

“தமிழகத்தில் ஸ்டாலின் தலை மையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. இதுபோன்ற கூட்டணி பல மாநிலங்களில் அமையாததால்தான் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது,” என் றார் இளங்கோவன்.

தேனி தொகுதியில் ரவீந்திர நாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டுமே 65,717 வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர்களில் தோல்வி அடைந்த ஒரே வேட்பாளர் இவர் மட்டுமே.

தமிழிசை, பொன். ராதாகிருஷ் ணன், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது மட்டும் ஏன் என்று பிரதமர் மோடிக்கு இளங் கோவன் கேள்வி எழுப்பினார்.

தமிழகம், கேரளா மாநில மக்களைப் போல வட இந்திய மக்கள் விவரம் உள்ளவர்களாக இல்லை என்று குறைகூறியவர் மோடியின் பிரசாரத்தில் அவர்கள் மயங்கிப் போய் உள்ளனர் என்றும் விரைவில் அவர்கள் மயக்கம் தெளிவார்கள் என்றும் கூறினார்.

இதற்கிடையே, தேனி தொகுதி யில் வாக்குப்பதிவு முடிந்தபின்னர் அதிமுகவிற்கு வாக்களிக்காத வர்களிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி அதிமுகவினர் கேட்டதாக செய்திகள் பரவின.

அதிமுகவினர் தன்னிடம் கொடுத்த ரூ.1,000 பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டதாக பாக்கியம் என்ற பெண் பேசிய காணொளி சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!