பாஜகவின் அடுத்த இலக்கு 333 தொகுதிகள்

புதுடெல்லி: எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 333 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என பாஜக தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டுமெனில் தமிழகம் உட்பட தென்னிந்திய கடலோர மாநிலங் களில் பாஜக மேலும் வளர்ச்சி காண வேண்டியது அவசியம் என் பதை ஒப்புக்கொள்வதாக அக் கட்சியின் முக்கியத் தலைவரான சுனில் தியோரா கூறியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 282 தொகுதிகளையும், நடந்து முடிந்த 2019 தேர்தலில் 303 தொகுதி களையும் கைப்பற்றி உள்ளது பாஜக. ஆனால் இது போதாது என்றும், 333 என்பதே கட்சியின் இலக்கு என்றும் கூறுகிறார் சுனில் தியோரா.

“எங்கள் இலக்கை எட்டிப் பிடிக்க மேற்கு வங்க மாநிலம் தொடங்கி, தமிழகம் வரை தென் னிந்திய மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்துவோம். இந்தி பேசும் கட்சி, இந்தி பேசுபவர்க ளுக்கான கட்சி என பாஜக மீது முத்திரை குத்தப்பட்டுள்ளது. அந்த முத்திரையைக் காணாமல் போகச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.

“தென்னிந்திய மக்களிடம் பாஜக மேலும் நெருங்கி வர வேண்டும் என்பதும் புரிகிறது,” என்று சொல்லும் சுனில் தியோரா ஆந்திரா மற்றும் திரிபுரா மாநிலங் களுக்கான பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் ஆவார்.

தற்போது ஆந்திர மக்களுடன் மேலும் நெருக்கமடையும் வகையில் தெலுங்கு மொழியில் பேச கற்றுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பாஜகவின் நடப்பு தேசியத் தலைவர் அமித் ஷா மத்திய அமைச்சராகப் பொறுப் பேற்பார் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில், மத்திய இணை அமைச்சர்களாக பொறுப்பு வகித்த ஜகத் பி.நட்டா, தர்மேந்திர பிரதான் ஆகிய இரு வரில் யாரேனும் ஒருவர் பாஜக தேசியத் தலைவராகப் பொறுப்பேற் பார் எனக் கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் பிர தமர் பதவியேற்பு நிகழ்வில் தாம் பங்கேற்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.