சுடச் சுடச் செய்திகள்

கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம்

பெங்களூரு: சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவருக்கு அமைச்சர் பதவி தருவது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் தமது ஆட் சியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அரசியல் கவ னிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் கூட்டணி ஆட் சியைக் கவிழ்க்க கர்நாடக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண் டது. எனினும் அனைத்தையும் சமாளித்து ஆட்சியில் நீடித்து வருகிறார் குமாரசாமி.

இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அம்மாநிலத்தில் பெரும் வெற் றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவ இருப்பதாக அண்மையில் பரபரப்பு ஏற்பட்டது. 

காங்கிரசை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் பாஜக தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினர். 

இதனால் பதற்றம் அடைந்துள்ள முதல்வர் குமாரசாமி தரப்பு, அதி ருப்தியாளர்களை சமாதானப்படுத்த முயன்று வருகிறது. அதன் முதற் கட்டமாக தனது அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளார் முதல் வர் குமாரசாமி.

இரண்டு சுயேச்சை எம்எல்ஏக் களுக்கும், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கம் அடுத்த வாரம் நடைபெறும் என் றும் தெரிகிறது.

இந்நிலையில் சுயேச்சைகளுக் கும் கலகம் ஏற்படுத்துபவர் களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் போது, ஏன் எங்க ளுக்கு பதவி கொடுக்கக்கூடாது? என்று குமாரசாமியிடம் அவரது சொந்தக் கட்சியினரே கேள்வி எழுப்புவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon