முப்படைக் குழுக்களுக்கிடையே போட்டிகள்

தொடர்ந்து 14ஆவது முறை சிங்கப்பூர் ஆயுதப் படையின் போர் பிரிவுப் போட்டியில் சிறந்த பிரிவு விருதை வென்றுள்ளது முதலாம் மின்னல் படைப் பட்டாளம் (1st commando battalion). இத் தொடர் வெற்றிக்குப் பங்காற்றிய மின்னல் படை வீரரான திரு கிரண் பிரபாகரன், 20, இந்த வெற்றிக்கு நல்ல படைத் தலைவர்களின் வழிக்காட்டுதலும் மனந்தளரா மனப்போக்குமே மிக முக்கிய காரணங்களாய் அமைந் தன என்றார். தமது பட்டாளத்தின் உறுப்பினர்களுடைய சகோதரத் துவமும் ஒற்றுமையும் மற்றொரு காரணமாய் அமைந்தது என்றும் அவர் சொன்னார். துணைப் படைப் பிரிவைத் தலைமை ஏற்று நடத்திச்சென்ற சார்ஜண்ட் கிரண் பிரபாகரன்,

தன்னுடைய பணிக்காலத்தில் வெவ்வேறு சவால்களைச் சந்தித்த தாகச் சொன்னார். அடிப்படை ராணுவப் பயிற்சி முடிந்தவுடன், தலைவர்களுக்கான ராணுவப் பயிற்சியையும் பெற்றார். தன்னுடைய ஐந்து மாத மின்னல் படை பட்டாளப் பயிற்சிப் பயணத்தின்போது அவர் சந்தித்த அடுத்த சவால் அவரு டைய தலைமைக்குக் கீழிருந்தவர் களை வழிநடத்தியதே. “படை வீரர்களுடைய மரியாதையைப் பெற்று, அவர்களுக்கு நல்ல தொரு முன்னுதாரணமாக இருப் பது ஒரு பெரிய சவாலாக இருந் தது,” என்று கூறினார் பிரபாகரன்.

இதே மின்னல் படையில் இருக்கும் இன்னொரு வீரரான திருக்கார்த்திக், 21, மிகக் கடுமையான பயிற்சிக்குப் பின் னரே அவருடைய பிரிவினால் இந்தப் பட்டத்தைப் பெற மு டி ந் த தெ ன் றா ர் . அடிப்படை ராணுவப் பயிற்சிக்குப் பிறகு அடுத்த கட்டப் பயிற்சி பெற்றார். பின்னர், ஆயுதம் தொடர்பான நிபு ணத்துவப் பயிற் சியைப் பெற்று, சிறப்பு வான்குடை பயிற்சி பெற்ற திருக்கார்த்திக், இந்த வெற்றி தமக்கு மிகுந்த பெருமையையும் கௌரவத்தையும் அளித்திருப்ப தாகக் கூறினார். மின்னல் படை வீரர்கள் உடல் உறுதியுடன் இருப்பது மிக முக்கிய மானது என்ற திருக்கார்த்திக், “என்னுடைய உடற்கட்டை வளர்த் துக்கொள்ள நான் மற்றவர்களை விடக் கடினமாக உழைக்க வேண்டியிருந்ததது,” என்றார். 

நிலத்தள ஆகாய தற்காப்புப் படையில் இருக்கும் சக்திவேல் கண்டியர்.