தேவைகளை அறிந்து செயல்பட ஆயத்தம்

ப. பாலசுப்பிரமணியம்

“சேவையாற்ற நாங்கள் தயார். ஆனால், இளையர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய சுதந்திரம் தாருங்கள்,” என்கிறார் துடிப்புமிக்க இந்த 25 வயது இளையர். அடுத்த மாதம் தமிழர் பேரவை மீண்டும் தனது இளையர் அணியை அதிகாரபூர்வமாகத் தொடங்கவுள்ளது. அந்த அணிக்குத் தலைமை தாங்கத் தயாராகி வருகிறார் நன் யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத் தில் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் அருண் வாசுதேவ் கிருஷ்ணன். இவருக்கு உதவும் வண்ணம் உயர்கல்வி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் இளையர் கள் என 24 உறுப்பினர்கள் அவருடன் இணைகின்றனர். “இளையர்களை ஈர்ப்பதற்காகப் பல இந்திய அமைப்புகள் நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்ய முனைகின்றன. ஆனால், அவை அவர்களைச் சென்றடைகிறதா என்பது கேள்விக்குறி,” என்கிறார் இவர். ஏற்பாடு செய்யப்படும் தமிழ்ச் சமூக நிகழ்ச்சி இளையரைக் கவரும் பாணியில் இல்லாமலோ அல்லது அவர்களைத் தொடர்பு படுத்தக்கூடிய அம்சங்களைக் கொண்டிராமலோ இருந்தால் அதில் கலந்துகொள்ள அவர் களுக்கு ஆர்வம் இல்லாமல் போய் விடுகிறது.

இதனை நிவர்த்தி செய்ய, இளையர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு அவற்றை மையமாகக்கொண்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது அருணின் கருத்து. உதாரணத்திற்கு, கம்பன் விழா போன்ற சமூக நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும்போது கம்பன் கவிதைகளை ‘ராப்’ (rap) பாடல் வடிவத்தில் இளையர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்போது தமிழ் இலக்கியத்திலும் இளையர் களுக்கு ஆர்வம் ஏற்படக்கூடும் என்கிறார் அருண்.

தமிழர் பேரவையின் இளையர் அணிக்குத் தலைமைதாங்க இருக்கும் அருண் வாசுதேவ் கிருஷ்ணன் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டக்கல்வி மேற்கொண்டு வருகிறார். படம்: தமிழர் பேரவை

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்