டெல்லியில் அப்துல் கலாம் அறிவுசார் மையம் திறப்பு: மாநில அமைச்சர் தகவல்

ராமேசுவரம்: எதிர்வரும் 27ஆம் தேதியன்று அப்துல் கலாம் அறிவு சார் மையத்தின் திறப்பு விழா டெல்லியில் நடைபெற உள்ளதாக டெல்லி சுற்றுலாத்துறை அமைச் சர் கபில் மிஸ்ரா தெரிவித்தார். ராமேசுவரத்தில் செய்தியாளர்க ளிடம் பேசியபோதே அவர் இத்தக வலை வெளியிட்டார். அப்துல் கலாம் அறிவுசார் மையத்தில் அவர் பயன்படுத்திய பொருட்களை காட்சிக்கு வைக்க உள்ளனர். இதையடுத்து கலாம் பயன்படுத்திய பொருட்களை ராமேசுவரத்தில் உள்ள அவரது மூத்த சகோதரர் முத்துமீரா மரைக்காயரை நேரில் சந்தித்து பெற்றுக்கொண்டார் கபில் மிஸ்ரா.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியின் இதய பகுதியான சரோஜினி நகர் எய்ம்ஸ் மருத்துவமனை அருகே கலாம் அறிவுசார் மையத்தை நிறுவ முதல்வர் கெஜ்ரிவால் நட வடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். "இந்த மையத்தில் கலாம் பயன்படுத்திய புத்தகங்கள், அவ ரது உடைகள், பேனா, கலாமுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்த உள்ளோம். அப்பொருட்களை கலாமின் சகோதரரிடமிருந்து பெற்றுக்கொண்டோம். அவை டெல்லிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. டெல்லியில் அமைய உள்ள அறிவுசார் மையம் கலாம் நினைவு நாளான ஜூலை 27ஆம் தேதி திறக்கப்பட உள்ளது," என்றார் கபில் மிஸ்ரா.

கலாம் பயன்படுத்திய பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் அமைச்சர் கபில் மிஸ்ரா. படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!