அழகிரி: யாருக்கும் ஆதரவில்லை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மட்டுமல்ல, எந்தக் கட்சி யையுமே ஆதரிக்கப்போவதில்லை என்று அதிரடியாக அறிவித்திருக் கிறார் திமுக தலைவர் கருணா நிதியின் மகனும் அக்கட்சியின் முன்னாள் தென்மண்டல அமைப் பாளருமான மு.க.அழகிரி. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க திமுக பெருமுயற்சி செய்தது. ஆனால், அழகிரி மட்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே, திமுக விலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆயினும், திமுக தலைமையை விமர்சிப்பதை அவர் நிறுத்தாததால் பின்பு கட்சியைவிட்டே நீக்கப்பட் டார். அதனால், அவரது ஆதர வாளர்களான நடிகர் நெப்போலியன் பாஜகவிலும் நடிகர் ரித்தீஷ் அதிமுகவிலும் இணைந்தனர்.

அதேபோல அழகிரியும் வேறு கட்சியில் சேரக்கூடும் என்று தகவல்கள் வெளியானபோதும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து, கடந்த இரு ஆண்டுகளாக அரசியல் வட்டாரத் தில் அதிகம் தலைகாட்டாமல் இருந்து வந்தார் முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி. இருப்பினும், அவர் திமுகவில் மீண்டும் இணையப் போகிறார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. ஆனால், அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி திடீரென கருணா நிதியை அவரது கோபாலபுரம் இல் லத்திற்கே நேரில் சென்று சந்தித் தார் அழகிரி. இதைத் 'தந்தை= மகன் இடையிலான சந்திப்பு' என்று ஸ்டாலின் குறிப்பிட்ட போதும் திமுகவில் அழகிரி மீண்டும் ஐக்கியமாவதற்கான அச்சாரமாகவே கருதப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!