திருடியதாக நினைத்து அடித்ததால் பணியாள் மரணம்

சென்னை: வண்ணாரப்பேட்டை மூலகொத்தளத்தில் உள்ள காந்திமதி என்பவரது வீட்டின் பணியாளான பென் செல்லையா என்பவரது மரணம் தொடர்பில் பலர் கை-து செய்யப்பட்டுள்ளனர். காந்திமதி வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது குறித்து அவர்களுக்கு பென் செல்லையா மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், பணத்தை எடுக்கவில்லை என்று அவர் கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில் பேசின் பிரிட்ஜ் அருகே ஒருவர் அசைவற்றுக் கிடப்பதாக போலிசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலிசார், அந்த நபரின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதைக் கண்டு அவரை மருத்துவமனைக்குச் கொண்டுச் சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து போலிசார் விசாரணையைத் தொடங்கினர்.

அதில், அவர் பென் செல்லையா என்பதும் காந்திமதி யின் மகன் மோகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பென் செல்லையாதான் பணத்தைத் திருடிவிட்டதாக எண்ணி அவரை அடித்து உதைத்ததில் அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக காந்திமதி, அவரது உறவினர் தேவி, குமார் ஆகியோரிடம் போலிசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள். பணத்தைத் திருடியதாக நினைத்துத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்