விறுவிறுப்பான தேர்தல்: அலைமோதிய கூட்டம்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர தமிழகம் முழுவதும் உள்ள 232 தொகுதிகளில் நேற்றுக் காலை முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. பல இடங் களில் மழை பெய்ததால் சற்று மந்தமாக காணப்பட்டாலும் மற்ற இடங்களில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே பலர் வரிசையில் காத்திருந்தனர். முற்பகல் 11 மணியளவில் தமிழகம் முழுவதும் 25.2 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலை யில் மாலை 5 மணிக்கு அது 69.19 விழுக்காடாக உயர்ந்தது. 6 மணிக்கு வாக்களிப்பு முடி வடைந்தபோது 70 விழுக்காட் டுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப் பட்டது. சென்னையில் வழக் கத்தைக் காட்டிலும் குறைவான வாக்குகள் பதிவாகின.

சென்னையில் அரசியல் தலை வர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் காலையில் சீக்கிரமாகச் சென்று தங்களது வாக்-குகளைப் பதிவு செய்தனர். திமுக தலைவர் கருணாநிதி காலை 7.15 மணி அளவில் கோபாலபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித் தார். முதல்வர் ஜெயலலிதா தனது வீட்டிற்கு அருகே உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் காலை 9.50 முதல் 10 மணிக்குள் வாக்களித்தார். அவ ரும் அவருடன் வந்திருந்த அவ ரது தோழி சசிகலாவும் பச்சை நிறப் புடவை அணிந்திருந்தனர். ராகு காலம், எமகண்டத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் ஜெய லலிதா வாக்களித்தார்.

 

Loading...
Load next