ரூ.570 கோடி விவகாரம்: தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை கோரும் டிராபிக் ராமசாமி

சென்னை: திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி ரொக்கப் பணம் தொடர்பான விசாரணை முடிவடையும் வரை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய் யப்பட்ட அப்பெருந்தொகையா னது சட்டப்பேரவைத் தேர்தலுக் காக கொண்டு வரப்பட்டதா? என்பதைக் கண்டறிய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

"இவ்வளவு பெரிய தொகை தொடர்பாக ஸ்டேட் வங்கி நிர் வாகம் சார்பில் அளிக்கப்பட் டுள்ள விளக்கம், தேர்தல் அதிகாரிகளுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பெருந்தொகையை எப்படி எடுத்துச் செல்வது? ஒரு வங்கி கிளையில் எவ்வளவு பணம் இருப்பு வைக்கலாம்? என்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஏற் கெனவே சில விதிமுறைகளை வகுத்துள்ளது. "ஆனால், அவற்றைப் பின் பற்றாமல், பாரத ஸ்டேட் வங்கி யின் கோவை கிளை நிர்வாகம் இத்தொகை தங்களது கிளை யில் இருந்து எடுத்து செல்லப்பட் டது என்று கூறியுள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய தொகையை இப்படி எடுத்துச் செல்வது சாத்தியமற்றது என்று முன்னாள் நிதியமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்," என ராமசாமி தமது புகார் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

எனவே, பறிமுதல் செய்யப் பட்டது சட்டவிரோதமான பணம் என்று தமக்குத் தோன்று வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மேலும், இதுவரை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள், இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எந்தவிதமான அறிக்கையும் தரவில்லை என் றும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!