மீண்டும் மம்தா இமாலய வெற்றி

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 6 கட்டமாக நடத்தப்பட்டது. தேர்தலின்போது பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் 212 தொகுதிகளிலும் இடதுசாரிகள் 29 தொகுதிகளிலும் காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு தொகுதிக்கான முடிவு வெளியாகவில்லை.

"சட்டசபை தேர்தல் வெற்றி 11 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்," என்று தெரி வித்துள்ள மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார். மம்தாவின் வெற்றி குறித்து டுவீட் செய்துள்ள மோடி, "மம்தா வின் சிறந்த வெற்றி தொடர்பில் வாழ்த்துகிறேன். 2வது முறையாகத் தொடரும் ஆட்சிக்கு எனது வாழ்த்துகள்," எனக் கூறியுள்ளார். தேர்தல் வெற்றி குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், "கட்டுக் கடங்கா வன்முறைகள், எதிர்ப்புச் சக்திகளை மீறி எங்களது வெற்றியை உறுதி செய்த வாக் காளர்கள் அனைவருக்கும் நன்றி. வரும் 27ஆம் தேதி நான் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பேன். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதால்தான் பொய் பிரசாரங்கள் எடுபடவில்லை. வெற்றிக் கொண்டாட்டம் மாநிலம் முழுவதும் தொடர்ந்து 11 நாட் களுக்கு நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கையில் மம்தா பானர்-ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கத் தொடங்கியது முதலே மேற்கு வங்க மாநிலம் எங்கும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களை கட்டத் தொடங்க, "மக்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி," என்று கூறினார் மம்தா. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!