உ.பி. கட்சி அலுவகங்களில் பணிச் சூழலில் அமிட் ஷா அதிரடி மாற்றம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாஜக அலுவலகங்களில் பணிச் சூழலும் பணி சார்ந்த நடவடிக்கைகளும் வேகப்படுத்தப் படும் என்று அக்கட்சித் தலைவர் அமிட் ஷா தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தின் 80 தொகுதி களில் 70 இடங்களை 2014ஆம் ஆண்டில் பாஜக வென்ற நிலை யில் கட்சி அலுவலகங்களில் வேலைக் கலாசாரம் மேம்பட வில்லை என்ற அக்கறை கட்சிக்கு இருந்தது. 2001ஆம் ஆண்டில் என்டி டிவிக்கு அப்போது மாநிலக் கட்சித் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், "15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கவில்லை நாங்கள். ஒவ்வொரு தலைவரும் கட்டாயப்படுத்தப்பட்டால் மட்டுமே கட்சி அலுவலகத்துக்கு வருகின்றனர்.

மதிய உணவுக்கு வீட்டுக்குப் போனால் தூக்கம் போட்டுவிட்டு அதன்பிறகு வரு வதுமில்லை," என்று கூறி இருந்தார். இந்நிலையில், இனி ஒவ்வொரு கட்சி ஊழியருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்படும் என்றும் அவர்கள் அலுவலகம் வரும், விட்டுச் செல்லும் நேரம் பதிவாகும் என்றும் அமிட் ஷா கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!