மருத்துவ நுழைவுத் தேர்வு அவசர சட்டத்துக்கு அதிபர் ஒப்புதல்

புதுடெல்லி: மருத்­துவ நுழைவுத் தேர்வு தொடர்­பான அவ­ச­ரச் சட்­டத்­துக்கு ஒப்­பு­தல் தெரி­வித்து குடி­ய­ர­சுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அச்­சட்­டத்­தில் இன்று (செவ்­வாய்க்­கிழமை) கையெழுத்­திட்­டார். இதனால், மருத்­துவ பொது நுழைவுத் தேர்வு ஓராண்­டுக்கு ஒத்­திவைக்­கப்­படு­கிறது. தமி­ழ­கத்­தில் தேர்வு இருக்­காது: தமி­ழ­கத்­தில் இந்த ஆண்டு அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் தேர்வு இருக்­காது. பிளஸ் 2 மதிப்­பெண் அடிப்­படை­யில் தமி­ழ­கத்­தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடை­பெ­றும். இருப்­பி­னும், தனியார் மருத்­துவ கல்­லூ­ரி­களில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடை­பெ­றும். தனியார் மருத்­துவ கல்­லூ­ரி­களில் உள்ள மாநில அரசு ஒதுக்­கீட்டு இடத்­துக்கு தேர்வு இருக்­காது. அரசு கல்­லூ­ரி­யில் உள்ள தேசிய ஒதுக்­கீட்டு இடத்­துக்கு தேர்வு எழுதியே மாண­வர்­கள் சேர முடியும்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்­படை­யில் மட்டுமே நாடு முழு­வ­தும் உள்ள மருத்­துவ மற்றும் பல் மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் மாண­வர்­களை சேர்க்க வேண்டும் என உச்ச நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. இதற்கு மாண­வர்­கள் மற்றும் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்ற­னர். இதுபோல நுழை­வுத்­தேர்வை தாங்களே நடத்­திக்­கொள்ள அனு­ம­திக்க வேண்டும் என்று மாநில அர­சு­களும் வலி­யு­றுத்தி வரு­கின்றன.

முன்­ன­தாக நேற்று (திங்கள்­கிழமை) அவர் மருத்­துவ நுழை­வுத்­தேர்வு குறித்த அவசர சட்டம் தொடர்­பாக, மத்திய சுகா­தா­ரத் துறை அமைச்­சர் ஜே.பி.நட்டா, குடி­ய­ர­சுத் தலைவர் பிரணாப் முகர்­ஜியை சந்­தித்­துப் பேசினார். இந்­நிலை­யில், இதுபோல அவசர சட்­டத்­துக்­கான அவ­சி­யம் குறித்து விளக்­கம் அளிக்­கு­மாறு சுகாதார அமைச்­ச­கத்தை குடி­ய­ர­சுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!