நிலத்தை விற்று சொந்தமாக அணை கட்டிய விவசாயி

மும்பை: பல ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்து வருவதால் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேளாண்மையும் விளைச்சலும் குறைந்து, விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. எப்போதாவது பெய்யும் மழை யும் சில சமயங்களில் விவசாயத் திற்குக் கைகொடுக்காது, ஏற் கெனவே விளைந்திருக்கும் பயிர் களை சேதப்படுத்தி அழித்து விடுவதால் கடன் வாங்கி விளை வித்த விவசாயிகளின் நிலைமை பரிதாபத்திற்குரியதாகி விடு கிறது.

இப்படி ஓர் நிலைமையை அகோலா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் டிக்டே, 42, என்ற விவசாயியும் எதிர்கொண்டார். சஞ்சய்க்குச் சொந்தமாக பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்தை ஒட்டி கால்வாய் ஒன்று இருக்கிறது. மழைக்காலங் களில் அக்கால்வாயில் பெருகி ஓடும் நீர் சஞ்சயின் வயலுக்குள் புகுந்து பயிர்களை மூழ்கடிப்ப துடன் மண்ணையும் அடித்துச் சென்று விடுகிறது. இதைத் தடுப்பதற்காக அப் பகுதியில் அணை கட்ட நிதி ஒதுக்குமாறு அரசாங்க அதிகாரி களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தார் சஞ்சய். ஆனால், அவர்கள் கைவிரித்து விட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!