தமிழக அமைச்சரவையில் 24 செல்வந்தர்கள்

சென்னை: தமி­ழக அர­சி­யல் வர­லாற்­றி­லேயே இல்­லாத அள­வுக்கு அதிக அள­வி­லான செல்­வந்தர்­களைக் கொண்ட முதல் அமைச்­ச­ரவை ஜெய­ல­லிதா தலைமை­யி­லான தற்­போதைய அமைச்­ச­ரவை­தான். அதா­வது மொத்தம் உள்ள 33 அமைச்­சர்­களில் 27 பேர் கோடீஸ்­வ­ரர்­கள் ஆவர். மற்ற 6 பேரும் லட்­சா­தி­ப­தி­கள் ஆவர். 17 பேர் பட்­ட­தா­ரி­கள். 29 அமைச்­சர்­களில் 2 பேர் மட்­டுமே 40 வய­திற்­கும் குறை­வா­ன­வர்­கள். 8 அமைச்­சர்­கள் மீது குற்ற வழக்­கு­கள் நிலுவை­யில் உள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.

தேர்­தல் பிர­மாண பத்­தி­ரத்­தில் அமைச்­சர்­கள் வெளி­யிட்­டுள்ள சொத்து மதிப்பு, வயது, கல்­வி­த­குதி உள்­ளிட்­டவற்றை அடிப்­படை­யாகக் கொண்டு நடத்­தப்­பட்ட ஆய்­வில் 24 அமைச்­சர்­கள், கோடீஸ்­வர்­கள். இவர்­களின் சரா­சரி சொத்து மதிப்பு ரூ.8.55 கோடி. அதிக சொத்து மதிப்பு கொண்ட அமைச்­சர்­களில் முதல்­வர் ஜெய­ல­லிதா முத­லி­டத்­தி­லும் (ரூ.113.73 கோடி),கே.சி.வீர­மணி 2வது இடத்­தி­லும் (ரூ.27.67 கோடி), பெஞ்ச­மின் 3வது இடத்­தி­லும் (ரூ.23.02 கோடி) உள்­ள­னர். மிகக் குறைந்த சொத்து மதிப்பு கொண்ட அமைச்­சர் ஆர்.பி.உத­ய­கு­மார். இவ­ரது சொத்து மதிப்பு ரூ.31.75 லட்­சம்.

அமைச்­சர்­களில் 8 பேர் மீது கிரி­மி­னல் வழக்­கு­கள் நிலுவை­யில் உள்­ளது. இவர்­களில் 4 பேர் மீது கடுமை­யான பிரி­வு­களின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளது. புதிய அமைச்­ச­ரவை­யில் இடம்­பெற்­றுள்ள 17 அமைச்­சர்­கள் பட்டம் அல்லது பட்ட மேற்­ப­டிப்பு முடித்­த­வர்­க­ளா­க­வும், 12 பேர் 12ம் வகுப்பு அல்லது அதற்­கும் குறை­வான கல்­வி­த­குதி உடை­ய­வர்­கள்.2016-05-28 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!