செய்தித்துறை விதிமீறல்: கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக அரசின் செய்தித்துறை அதிகாரிகள் விதிமுறைகளை மீறிச் செயல் பட்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்குமா? என அவர் வெளி யிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன்னர் ‘வாக்காளர்களுக்கு வேண்டு கோள்’ என்ற தலைப்பில் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கையை அரசு செய்தித்துறை ஊடகங்களுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இது விதிமுறைகளை மீறிய செயல்பாடு என்பதே கருணா நிதியின் குற்றச்சாட்டாகும். “கடந்த மே 12ஆம் தேதி யுடன் தமது தேர்தல் பிரசா ரத்தை முடித்துக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அதற்குப் பிறகு அறிக்கைகள் வாயிலாக வாக்குகளை சேகரித்து வந் தார். அவ்வாறு மே 14ஆம் தேதி மதியம் 1.06 மணிக்கு அதிமுக தோழர்களுக்கு ஜெய லலிதா விடுத்த அறிக்கையை, அரசு செய்தித்துறை அதிகாரி கள் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளனர். “இது பற்றி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உடனடி யாக திமுக அமைப்புச் செயலா ளர் மூலமாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால் இல்லை,” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Loading...
Load next