உ.பி. முதல்வர் வேட்பாளர் யார்; குழப்பத்தில் பாஜக

புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் பாஜகவில் குழப்பம் நிலவுகிறது. அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளதால், முன்னாள் உ.பி. முதல்வரான ராஜ்நாத்சிங்கையோ அல்லது ஸ்மிருதி இரானியையோ முன்னிறுத்த பாஜக, ஆர்எஸ்எஸ் விரும்பினாலும் கருத்துக் கணிப்புகளில் அவர்கள் இருவரையும்விட வருண்காந்திக்கே ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த வருண்காந்தியை முதல் வர் வேட்பாளராக முன்னிறுத்த பாஜக தயாராக இல்லை. இதனால் பாஜகவில் குழப்பம் நீடித்து வருகிறது. ஆகையால் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்காமல் ராஜ்நாத் சிங் தலைமையில் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலை பாஜக எதிர்கொள் ளவே வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது