சிலை கடத்தல்: தீனதயாளனின் மற்றொரு வீட்டிலும் நூற்றுக்கணக்கான சிலைகள்

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் சரணடைந்த தீனதயாள னின் மற்றொரு வீட்டில் உள்ள கிடங்கில் நூற்றுக்கணக்கான சாமி சிலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. எத்தனை சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பதை காவல் துறை விரைவில் அறிவிக்க உள்ளது. தமிழகத்தில் இருந்து பழம் பெரும் சாமி சிலைகளை வெளி நாடுகளுக்குக் கடத்தும் கும் பலைச் சேர்ந்தவர்களைப் போலி சார் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். அண்மையில் ஆழ் வார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து பல கோடி மதிப்புள்ள 124 சாமி சிலைகள் கைப்பற்றப் பட்டன. மேலும், மதிப்பு வாய்ந்த 40 ஓவியங்களும் சிக்கின. இது தொடர்பாக தீனதயாளன் என்பவர் சிக்கியுள்ளார். அவர் கடந்த 20 ஆண்டுகளாக சிலை கடத்தலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் அவருக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் போலிசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான சிலைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீட்டை கிடங்கு போல் பயன்படுத்தி சிலைகளை மறைத்து வைத் துள்ளார் தீனதயாளன். இந்தச் சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் எனக் குறிப்பிடும் காவல்துறையினர், சென்னையில் தீனதயாளனுக்கு சொந்தமாக உள்ள மூன்றாவது வீட்டிலும் அடுத்து சோதனையிட உள்ள தாகத் தெரிவித்துள்ளனர்.