‘எஃப்சிஆர்ஏ’ சட்டத்தை நீக்கக் கோரும் ஐநா

புது­டெல்லி: பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு எதிராக விமர்­சனம் செய்த ­சமூக ஆர்­வ­லர் ஒருவர் நடத்தி வரும் லாப­நோக்­கற்ற அறக்­கட்­டளைக்கு வெளி­நாட்­டி ­லி­ருந்து நன்கொடை பெறும் உரிமம் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. அந்த அறக்­கட்­டளை வெளி­நாட்டு நிதியை தவ­று­த­லா­கப் பயன்­படுத்­தி­ய­தா­கக் கூறி இந்த உரிமம் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. டீஸ்டா செடல்­வத் எனும் சமூக ஆர்­வ­ல­ரால் நடத்­தப்­படும் சப்ராங் அறக்­கட்­டளை பெற்ற வெளி­நாட்டு நிதியில் பல்வேறு முறை­கே­டு­கள் நடந்­தி­ருப்­ப­தாக உள்துறை அமைச்சு நேற்று முன்­தி­னம் குற்றம் சாட்­டி­யது.

உள்­நாட்டு, வெளி­நாட்டு நிதிகளை அந்த அறக்­கட்­டளை சட்ட விரோ­த­மாக ஒன்­றிணைத்­த­தா­க­வும் அதில் சொல்­லப்­பட்­டது. 2002ஆம் ஆண்டில் பிரதமர் மோடி குஜ­ராத்­தின் முதல்­வ­ராக இருந்த­போது சமயம் சார்ந்த கல­வ­ரத்­தில் படு­கொலைச் சம்ப­வங்களில் ஈடு­பட்­ட­தாக நம்பப்­படும் 24 இந்­துக்­கள் மீதான வழக்­கில் நேற்று தீர்ப்பு வழங்கப்­பட்­டது. இது குறித்து விமர்­சித்து வந்த­தற்­காக தாம் தொடர்ந்து குறிவைக்­கப்­படு­வ­தாக டீஸ்டா செடல்­வத், 54, குறிப்­பிட்­டுள்ளார். உள்துறை அமைச்­சின் ஆணையை எதிர்­கொள்ள தேவை யான சட்ட நட­வ­டிக்கை­கள் எடுப்­பது குறித்து ஆரா­யப்­படும் என அந்த அறக்­கட்­டளை­யின் செய­லா­ளர் கூறி­யுள்­ளார்.

வெளி­நாட்டு நிதியால் ஆத­ரிக்­கப்­பட்டு வந்த அர­சு­சாரா அறக்­கட்­டளை­க­ளான கிரீன்­பீஸ், ஃபோர்ட் அறக்­கட்­டளை­ஆ­கி­ய­வற்­றின் ­மீது மோடி அரசு கடும் நட­வ­டிக்கை எடுத்­த­தற்கு எதிரான விமர்­ச­னங்கள் ஏற்­கெ­னவே வெளி­யா­கி­யி­ருந்தன. வெளி­நாட்டு நிதி பெறுவதை முறைப்­படுத்­தும் சட்­ட­மான 'எஃப்­சி­ஆர்ஏ' அனு­ம­திக்­காத நட­வ­டிக்கை­களை இந்த மூன்று அறக்­கட்­டளை­களும் மேற்­கொண்ட­தாக அர­சுத்­த­ரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

டீஸ்டா செடல்­வத் நடத்தி வரும் சப்ராங் அறக்­கட்­டளை வெளி­நாட்டு நிதி பெறு­வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!