இரண்டோடு 22; எச்ஐவி தாக்கம் கண்ட ஆதரவற்ற பிள்ளைகளுக்கு பெற்றோர்போல அடைக்கலம் தரும் தம்பதி

மும்பை: எச்ஐவி தாக்கம் கண்டபிள்ளைகளை நெருங்கிய உறவினர்கூட பராமரிக்காமல் ஒதுக்கிவைக்கும் வேளையில் எச்ஐ­வி­யால் பாதிக்­கப்­பட்ட 22 பேரை சொந்தப் பிள்ளை­களைப் போலவே பரா­ம­ரித்து வரு­கின்ற­னர் மும்பையைச் சேர்ந்த தம்பதி. இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான திரு ரெஜி மும்பை­யில் உள்ள டிஒய் படில் மருத்­து­வ­மனையைக் கடந்து சென்ற­போது மருத்­து­வ­மனைக்கு வெளியே பசியுடன் படுத்­தி­ருந்த சிறு­மியைக் கண்டு அவ­ருக்கு உணவு வாங்கிக் கொடுக்க முன்­வந்தார். ஏற்­கெ­னவே பெற்றோரை இழந்­தி­ருந்த அந்தச் சிறுமி எச்ஐவி தாக்கம் கண்­டி­ருந்தார். சிறு­மி­யின் விருப்­பப்­படி நூடல்ஸ் வாங்கித் தர எண்ணிய ரெஜி மறுநாள் நூடல்ஸ் உண­வு­டன் மருத்­து­வ­மனைக்­குச் சென்றார்.

ஆனால் அந்தச் சிறுமி இறந்­து­போன செய்­தியையே அவரால் தெரிந்து­கொள்ள முடிந்தது. இத னால் மிகவும் மனம் வருந்­திய திரு ரெஜி, இது­போன்ற ஆதர வற்ற சூழலில் வேறு யாரேனும் இருந்தால் தமக்­குத் தகவல் அளிக்­கும்படி மருத்­து­வ­ மனையைக் கேட்­டுக்­கொண்டார். 2009ஆம் ஆண்டு எச்ஐவி தாக்கம் கண்ட இரு பிள்ளை­களைத் தம் குடும்பத்­து­டன் சேர்த்­துக்­கொண்டு நாவி மும்பை­யில் வாடகை வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்த ரெஜி­யு­டன் தற்போது எச்ஐவி தாக்கம் கண்ட 22 பிள்ளை­கள் வசித்து வரு­வதாக இந்தியாடைம்ஸ் தெரிவித்தது. தொடக்­கத்­தில் பொரு­ளா­தா­ரச் சிக்கல் இருந்த­போ­தும் பின்னர் பலர் உதவி வழங்க ஆரம்­பித்­த­தா­கச் சொன்னார் ரெஜி. வீட்டில் இருக்­கும் 24 பேரி­ட­மும் பார­பட்­ச­ம் பார்க்­கா­மல் கவ ­னித்­துக்­கொள்­வ­தா­கக் கூறிய திரு ரெஜி, தமது மனைவி உறு­துணை­யாக இருப்­பதைப் பெருமை­யா­கக் கூறினார். உணவு, மருந்­து­ ஆகி­ய­வற்றை அளித்­துப் பரா­ம­ரிப்­ப­து­டன் பிள்ளை­களுக்கு நல்ல முறையில் கல்­வி­யும் வழங்­கு­கின்ற­னர் இந்தத் தம்ப­தி­யர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!