மெட்ரோ ரயிலில் பாதுகாப்புக்காக மத்திய பெண்கள் படை

புதுடெல்லி: மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்குத் தொல்லை கொடுப்போரைப் பிடிப்பதற்காகவும் பெண்களின் பாதுகாப்புக்காகவும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பெண்கள் பிரிவு அமர்த்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் சிலர் தவறாக நடந்துகொள்ள முயல் வதாகவும் பொருட்கள் திருட்டுப் போவதாகவும் பல புகார்கள் பெறப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் ஏதுமின்றி எதிராளிகளைத் தாக்குவதற்கான திறனைப் பெற்றுள்ளனர் இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்கள். சுயமாகத் தம்மைப் பாது காத்துக்கொள்ள விரும்பும் பிற பெண்கள் இவர்களிடம் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சூழல்களையும் சமாளிக்கப் பலவிதமான பயிற்சிகளைப் பெற்றுள்ள இந்தப் பெண்கள் குழு தங்கள் திறமையை நேற்று முன்தினம் காட்சிப்படுத்தியது. 20 நிமி டங்களுக்கு நீடித்த இந்தப் பாவனைப் பயிற்சியை மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் நாடாளுமன்றப் படையினரும் பார்வையிட்டனர். படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!