உனா தாக்குதலில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து கெஜ்ரிவால் ஆறுதல்

ராஜ்கோட்: கடந்த ஜூலை 11 ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் கிர்=சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் பசுவைக் கொன்று அதன் தோலை உரித்து எடுத்துச் சென்றதாக புகார் கூறப் பட்டது. இதையொட்டி பசு வதைத் தடுப்பு ஆர்வலர்கள் என்ற பெயரில் வந்த சிலர் அந்த 4 இளைஞர்களையும் நடுவீதியில் கட்டி வைத்து அவர்களது பின் பக்கம் தடியால் ஒருவர் மாற்றி ஒருவராக அடிகொடுத்தனர். இந்த சம்பவத்தை சிலர் காணொ ளிப் பதிவு செய்து சமூக வலைத் தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரி வித்து மாநிலம் முழுவதும் போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினை புயலைக் கிளப்பியது.

இதையடுத்து நேற்று முன்தினம் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, உனா சம்பவத்தில் தாக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கெஜ்ரிவால், உனா தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்மூலம் அரசுக்குத் தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது. குஜராத் மாநில அரசு தாழ்த் தப்பட்ட பிரிவினருக்கு எதிராகச் செயல்படுகிறது. மாநிலத்தில் அப்பிரிவினரை ஒடுக்குவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!