பாலம் உடைந்து ஆற்றில்மூழ்கிய பேருந்துகள்: இரு சடலங்கள் மீட்பு, 20 பேர் மாயம்

இந்தியாவின் மும்பை அருகே ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்த தில் 2 பேர் மாண்டனர். இரண்டு பேருந்துகள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் அவற்றில் பயணம் செய்த 20 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. மும்பை=கோவா விரைவுச் சாலையில் மஹாத் நகர் அருகே சாவித்திரி ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் மேல் இருவழிப் போக்கு வரத்துக்காக இரு பாலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பிரிட் டிஷ் ஆட்சிக் காலத்தில் கிட்டத் தட்ட எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது. கடின மழை பெய்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் அந்தப் பழைய பாலம் திடீர் என இடிந்து விழுந்தது. அப்போது அந்த மேம் பாலத்தில் பயணம் செய்து கொண்டிருந்த அரசுப் பேருந்து கள் இரண்டு அப்படியே ஆற்றில் விழுந்தன. அந்தப் பேருந்துகளில் இருந்த 22 பேரும் பேருந்துகளோடு ஆற் றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அந்த அதிர்ச்சி செய்தி பரவி யதைத் தொடர்ந்து காணாமற்போன வர்களைத் தேடி மீட்கும் பணி தொடங்கப்பட்டது. முக்குளிப்பாளர் கள் மீட்பாளர்கள் என கிட்டத்தட்ட 80 பேர் சாவித்திரி ஆற்றுப் பகுதி யில் தேடுதல் பணியில் ஈடுபட் டனர். நேற்று பிற்பகலில் இரு சடலங் கள் மீட்கப்பட்டன. ஆனால், பேருந்துகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தேசிய பேரிடர் நிவாரணப் படையினரும் கடலோரக் காவல் படையினரும் இரு ஹெலிகாப்டர் கள், ஆறு படகுகள் மூலம் தேடு தல் வேட்டையில் இறங்கியுள்ள னர். பேருந்துகள் தவிர இதர வாகனங்களும் ஆற்றில் விழுந் தனவா என்பதை யாராலும் உறுதி செய்ய இயலவில்லை. 35 நிபுணத்துவ முக்குளிப்பாளர் கள் பாலம் விழுந்த இடத்திலிருந்து ஆற்றின் வெகுதூரம் வரையில் தேடுதல் பணியில் ஈடுபட்டு இருப் பதாக காவல்துறை கண்காணிப் பாளர் சஞ்சய் பாட்டீல் நேற்று பிற்பலில் செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது வரை எந்தவொரு வாகனமும் கண்டுபிடிக்கப்பட வில்லை. அதேபோல உயிருடன் எவரும் மீட்கப்படவில்லை. இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. மகாராஷ்டிர முத லமைச்சர் தேவேந்திர ஃபட்னா விஸைத் தொடர்புகொண்ட பிர தமர் நரேந்திர மோடி மீட்பு, நிவாரணப் பணிகளுக்கான உதவிகளுக்கு உறுதி அளித்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மற்றொரு பாலம் இருவழிப் போக்குவரத்தாக மாற்றப்பட்டதால் இடிந்து விழுந்த பாலத்தில் செல்ல வேண்டிய வாகனங்கள் அதில் சென்றன. இதற்கிடையே, பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என நேற்று மகாராஷ்டிர சட்டப் பேரவையில் எதிர்த்தரப்பு காங் கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. பழங்கால பாலம் போக்குவரத் துக்குத் தகுதியானது என்று கடந்த மே மாதம் சான்றளித்த அதிகாரியையும் அதற்கு இசைந்த பொதுப்பணித் துறை அமைச் சரையும் தண்டிக்க வேண்டும் என்றும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பிரித்வி ராஜ் சவான் கேட்டுக்கொண்டார்.

இரண்டு பாலங்களில் பழமையான (இடது) பாலம் கிட்டத்தட்ட ஐம்பது அடி நீளத்திற்கு உடைந்துவிட்டது. படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!