வீட்டுப்பாடம் செய்யாத சிறுமியைத் அடித்த ஆசிரியர் மீது வழக்கு

பெங்களூரு: வீட்டுப் பாடம் செய் யாத ஏழு வயதுச் சிறுமியை இடை வாரால் தாக்கி கடும் காயங்களை விளைவித்த ஆசிரியர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. சென்ற செவ்வாய்க்கிழமை கர்நாடாகாவின் நெலமங்களா பகுதியில் சுபாஷ் நகரில் உள்ள ஆசிரியர் வீட்டுக்கு ஏழு வயதுச் சிறுமி சென்றார். அப்போது துணைப்பாட வகுப்புகளை நடத்தும் ஆசிரியர், வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த அந்தச் சிறுமியை இடை வாரால் விளாசியிருக்கிறார். இதனால் சிறுமிக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன.

பின்னர் வீட்டிற்குச் சென்ற சிறுமி பெற்றோரிடம் ஆசிரியர் அடித்ததைக் குறித்துத் தெரிவித் தாள். ஆத்திரமடைந்த பெற்றோர், உடனடியாக காவல்துறையினரி டம் புகார் அளித்தனர். இதற்கிடையே ஆசிரியர் தலைமறைவாகிவிட்டதால் காவல் துறையினர் அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக துணைப் பாட வகுப்புகள் எடுத்து வரும் அந்த ஆசிரியர் பாடங் களைச் செய்யாத குழந்தைகளை அடிப்பது வழக்கமாம். அது அவர்களின் நன்மைக் காகவே எனக்கருதி சில பெற் றோர் அமைதியாக இருந்துவிடு கின்றனர் என்-று சில உள்ளூர் வாசிகள் கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!