தமிழக விவசாயிகளை ஏமாற்றும் வேலையை அதிமுக அரசு கைவிட வேண்டும்: கருணாநிதி

சென்னை: விவசாயிகளை ஏமாற் றும் வேலையைக் தமிழக அரசு கைவிட வேண்டும் எனத் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பதற்கு உண் மையான அக்கறையோடு செயல் பட அரசு முன் வரவேண்டும் என விலயுறுத்தி உள்ளார். தொடர்ந்து ஐந்தாவது ஆண் டாகக் குறுவையை இழந்து, முதல்முறையாகச் சம்பாவையும் இழக்கும் இக்கட்டான நிலை மைக்கு விவசாயிகள் ஆளாகி இருப்பதாகக் கவலை தெரிவித் துள்ள அவர், விவசாயிகள் கேட்பது பாசனத்திற்கான தண் ணீர் மட்டுமே என்றும் முதல்வர் ஜெயலலிதா வழங்கும் மானி யத்தை அல்ல என்றும் கூறி உள்ளார்.

"அதிமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும், விவசாயிகள் தங்கள் தலையில் கைவைத்துக்கொண்டு சங்கட சாகரத்தில் வீழ்வதுதான் வாடிக்கையாக இருந்து வந்துள் ளது. அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டு, அதன் காரணமாக அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் குறுவை பொய்த்து தற்போது ஐந்தாம் ஆண்டாகக் குறுவை பொய்த்துப் போய்விட்டது," என கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். டெல்டா மாவட்ட விவசாயிக ளின் வேதனை பல்கிப் பெருகி விட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், டெல்டா மாவட்டக் குறுவை என்பது அருங்காட்சியகத்தில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பொருளாகிவிட்டதோ என்று திகைக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!