42 பேருந்துகள் எரிப்பு: கன்னடப் பெண் கைது

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக் கப்பட்டதைக் கண்டித்து கடந்த 12ஆம் தேதி கர்நாடகாவில் நடந்த வன்முறையின்போது கேபிஎன் பேருந்துகள் உட்பட 42 பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இச்சம்பவத்தில் ஏற்கெனவே ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் எரிப்பதற்கு மூல காரணமாக இருந்த 22 வயதுப் பெண் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர். “பேருந்துகளுக்கு தீ வைக்க பெண் ஒருவர் உதவினார். ஆனால் அவர் யாரென்று தெரியாது,” என ஏழு பேரும் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலிசார் ஆய்வு நடத்தினர். இளம்பெண் ஒருவர் பெட்ரோலை எடுத்து பேருந்துகளின் மீது ஊற்றி தீ வைப்பது கே மராக்களில் தெரிந்தது. அதில் தெரிந்த அடையாளங்களை வைத்து விசாரணை மேற்கொண்ட போலிசார் இறுதியில் அவரை கைது செய்தனர்.

பாக்யஸ்ரீ எனப்படும் அந்தப் பெண் கர்நாடகாவின் யாகதிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூருவுக்குப் பிழைப்புத் தேடி குடும்பத்துடன் வந்த பாக்யஸ்ரீ காவிரிப் போராட்டம் நடைபெறுவதை அறிந்து வைத்திருந்தார். சம்பவத்தன்று கன்னட இளையர்கள் சிலர் கொடியேந்தி ஆத்திரத்துடன் வந்துகொண்டு இருந்ததைக் கண்ட அந்தப் பெண், பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இடத்தை அடையாளம் காட்டி அவற்றைக் கொளுத்தத் தூண்டினாராம். நடந்த விவரங்களை பாக்யஸ்ரீ வாக்குமூலமாக போலிசாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பதற்றம் முழுமையாக தணியாததால் கர்நாடகம், தமிழ்நாடு இடையிலான வாகனப் போக்குவரத்து இன்னும் இயல்புநிலைக்குத் திரும்ப வில்லை.

கர்நாடக அரசுப் பேருந்துகள் ஓசூர் அருகே கர்நாடக எல்லை யான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அங்கிருந்து தமிழக எல்லை யான ஓசூர் ஜூஜூவாடி வரை பயணிகள் நடந்து வந்து தமி ழகத்திற்குள் நுழைய வேண்டி யுள்ளது. அதேபோல தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூர் ஜூஜூவாடி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இரு மாநிலங்களுக்கு இடையில் தினமும் கார், வேன், லாரி ஆகியன உள்ளிட்ட 5,000 வாக னங்கள் போக்குவரத்தில் ஈடு படுவது வழக்கம். அதேபோல கர்நாடக மாநிலம் வழியாக இதர மாநிலங்களுக்கு ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 40,000 வாகனப் பயணங்கள் மேற் கொள்ளப்படுகின்றன.

காவிரிப் போராட்டம் காரண மாக இந்தப் போக்குவரத்து அனைத்தும் முடங்கிப்போய் உள்ளது. வழக்கமான வாகனப் போக்குவரத்து தொடங்காததால் வாகனங்களை இயக்குவோ ருக்கு தினமும் ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருவதாக அனைத்து இந்திய வாகனப் போக்குவரத்து காங்கிரஸ் என் னும் அமைப்பின் தலைவர் ஜிஆர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கடந்த 12ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட தமிழக லாரி ஓட்டுநர் மணிவேல் என்பவர் தமிழ் நாட்டுக்கு வர இயலாத நிலை இருப்பதாகத் தகவல் கிடைத்து உள்ளது.

 

அரை நிர்வாணம் ஆக்கப்பட்டு வன்முறை யாளர்களால் தாக்கப்பட்ட மணிவேல். தற்போது பெங்களூரு அருகே பயத்துடன் இருப்பதாகக் கூறுகிறார் இவர். படம்: இந்திய ஊடகம்

Loading...
Load next