தண்ணீர் விடாதது நீதிமன்ற அவமதிப்பு; கர்நாடகாவுக்கு தமிழக அரசு கண்டனம்

சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்துவிடாதது நீதிமன்ற அவ மதிப்புச் செயல் என்று கண்டனம் தெரிவித்து தமிழக அரசு சார்பில் கர்நாடக அரசுக்கு கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் அரவிந்த் ஜாதவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள் ளது.

“உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு கடந்த 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தினமும் 6,000 கனஅடி வீதம் மொத்தம் 42,000 கனஅடி தண் ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு அதை செய்யத் தவறியிருப்பது நீதிமன்ற அவமதிப்புச் செயல்,” என்று ராம மோகன ராவ் கண்டனம் தெரி வித்துள்ளார். எனவே, உடனடியாக தமிழகத் துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கடிதத்தின் நகல் காவிரி மேற்பார்வைக் குழுவுக்கும் அனுப் பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தமிழகத்துக்கு காவிரியில் 6,000 கன அடி நீரைத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இறுதிவரை தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிட இயலாது என்று அந்த மனுவில் கர்நாடகா தெரிவித்து உள்ளது.

 

மு.க. ஸ்டாலி னுடன் சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் கள். படம்: தமிழக ஊடகம்

Loading...
Load next