தஞ்சையில் சசிகலா போட்டியிட வாய்ப்பு

சென்னை: தமிழக முதல்வரின் நெருங்கிய தோழியான சசிகலா தஞ்சை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தஞ்சையில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் மாத இறுதிக்குள் அங்கு தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப் பட்டு இரு வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே, இத்தகைய சூழ்நிலையில் முதல்வரின் தோழி சசிகலா நேரடி அரசியலில் ஈடுபட வேண் டும் என அவரது தரப்பினர் வலியு றுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. “ஜெயலலிதா உடல்நிலை தேற சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே ஆட்சி நிர்வாகத்தை இப்போது வழிநடத்து வது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. “இத்தகைய சூழ்நிலையில் சசிகலா நேரடி அரசியலுக்கு வர வேண்டும் என்றும் தஞ்சாவூர் தொகுதியில் அவரைப் போட்டியிட வைக்க வேண்டும் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் விரும்புகின்றனர். “அதற்கான பணிகளையும் செய்து வருகின்றனர்,” என்று தமிழக ஊடகம் பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.