மழை பெய்ய வேண்டி 10 கிராமத்தை விட்டு பெண்கள் வெளியேற்றம்

திருப்பூர்: மழை பெய்ய வேண்டி தாராபுரம் அருகே 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பெண்கள் ஊரை விட்டு வெளியேறி, வினோத வழிபாடு நடத்தி னர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே வடுக பாளையம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதித்து, குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே, தொன்றுதொட்டு நடத்தப்படும் பாரம்பரிய வழிபாட்டை நடத்தினால் மழை பெய்யும் என கிராமப் பெரியவர்கள் ஆலோசனை வழங்கினர். அதன்படி நூற்றுக்கணக்கான பெண்கள் மூன்று நாட்களாக மழை வேண்டி விரதம் இருந்தனர். ‘வறட்சி அரக்கன்’ உருவப் பொம்மையையும் ஊர் எல்லையில் வைத்து எரிந்தனர். “வறட்சி நிலவும் கிராமத்தில் இனியும் வசிக்க முடியாது,” என்று கூறி, ஊரை காலி செய்துவிட்டு வெளியேறினர். கிராமப் பெரியவர்கள், “நிச்சயம் மழை பெய்யும். ஊருக்குத் திரும்பி வாருங்கள்,” என்று கூறி பெண்களைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு