இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு

காஷ்மீரில் உரி பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் எல்லை தாண்டிய பயங்கரவாதமே என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அமெரிக்கா, தன்னைத்தானே தற்காத்துக்கொள்ள இந்தியா விற்கு முழு உரிமையும் இருக் கிறது என்று ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. காஷ்மீர் விவகாரத்திற்குத் தீர்வு காண்பதன் மூலம் உள் நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ் தானில் அமைதியை ஏற்படுத்த லாம் என்று பாகிஸ்தான் கூறி இருப்பதையும் அமெரிக்கா நிராகரித்துள்ளது.

இப்போதைய நிலையில் இந்திய =அமெரிக்க உறவு ஆற்றல்மிக்க தாக உள்ளது எனக் குறிப்பிட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன் றத்தின் தெற்காசியாவிற்கான மூத்த இயக்குநர் பீட்டர் லவோய், உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தியது அமெ ரிக்க அதிபர் பராக் ஒபாவின் சாத னைகளில் ஒன்று என்றும் குறிப் பிட்டார். "உரியில் நிகழ்ந்தது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தத் தாக்குதலை வன்மையாகக் கண் டிக்கிறோம். அது ஒரு கொடூரமான தாக்குதல். தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு.

"எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடாது என்பதில் இந்தியாவின் அக்க றையை நாங்களும் ஏற்கிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாத மிரட்டல்களுக்கு ராணுவத்தைக் கொண்டு பதிலடி தரவேண்டும் என்ற இந்தியாவின் நிலையை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். அதே நேரத்தில், எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அறி வுறுத்துகிறோம்," என்று திரு லவோய் கூறினார். இதற்கிடையே, பாகிஸ்தானின் உண்மையான எதிரி அமெரிக்கா தான் என்று ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசார் தெரிவித்து இருக்கிறான்.

ஆனால் அதை ஒரு பொருட்டாகக் கருதி, மதிப்பளிக்க வேண் டியதில்லை என்று அமெரிக்கா புறக்கணித்துவிட்டது. ஆயினும், 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை நகரின் பல இடங்களில் நிகழ்ந்த பயங்கர வாதத் தாக்குதல்களுக்கு மூளை யாகச் செயல்பட்ட மசூதின் வார்த் தைகளை அமெரிக்கா எளிதாக எடுத்துக்கொள்ளாது என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, மும்பை தாக்கு தல்களுக்குக் காரணமானவர்களைப் பிடித்துத் தண்டிக்க வேண்டும் என்றும் பயங்கரவாதி களுக்குப் புகலிடம் அளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி இருக்கிறது.

இந்தியாவிற்கு எதிராகப் பயங் கரவாதப் பாதையைத் திறந்து விட்டு, காஷ்மீரைத் தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருவதற் கான வாய்ப்பைப் பாகிஸ்தான் அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் 'அல்-கலாம்' எனும் ஜெய்ஷ்=இ= முகம்மது அமைப்பின் வார இதழில் மசூத் அறைகூவல் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!