கட்டடம் இடிந்து பலர் பலி

மும்பை: மும்பை­யின் கிழக்கு பாந்த்ரா பகு­தி­யில் உள்ள பெஹ்­ராம்ப­டா­வில் ஐந்து மாடிக் கட்­ட­டம் ஒன்று இடிந்து அரு­கி­லி­ருந்த குடிசைப்­ப­கு­தி­யில் சரிந்தது. அதில் ஆறு பேர் இறந்து விட்­ட­னர். சம்ப­வம் நிகழ்ந்த இடத்­தில் கட்­ட­டங்கள் நெருக்­க­மாக இருப்­ப­தால் மீட்­புப் பணி­கள் மிகுந்த சவா­லாக இருந்த­தாக தீயணைப்பு வீரர் ஒரு­வர் தெரி­வித்­தார். ஐவர் படு­கா­யங்களு­டன் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­மனை யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். மிக­வும் நெரி­ச­லான குறு­கிய இடத்­தில் விதி­களை மீறி அதிக உய­ரத்­தில் கூடு­தல் அடுக்­கு­மா­டி­களை இப்­ப­கு­தி­யில் பல­ரும் கட்டி உள்­ள­தால் விபத்­து­கள் நிகழ்­கின்றன.