மாநிலம் முழுவதும் பட்டாசுக் கடைகளில் அதிரடி சோதனை

சிவகாசி: பட்டாசு விபத்துகள் தொடர்கதையாகிவிட்ட நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள பட்டாசுக் கடைகளில் அரசு அதி காரிகள் அதிரடிச் சோதனை மேற் கொண்டனர். சிவகாசி பட்டாசு விபத்தையடுத்து இந்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிவகாசியில் செயல்பட்டு வந்த பட்டாசுக் கடையில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியாகினர். இதையடுத்து அக்கடையின் உரி மையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் ஆறு பேரை போலிசார் கைது செய்துள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபெருள் கட்டுப் பாட்டுத் துறை அலுவலர்கள் போர்கர், சரவணன், சாதுகான் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், தீப்பற்றி எரிந்த பட்டாசுக் கடை மற்றும் வேனில் இருந்த வெடிப் பெருட்களின் மாதிரிகளையும் அவர்கள் சேகரித்தனர்.

இதையடுத்து, பட்டாசுக் கடை உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பெற்ற விளக்கக் கூட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங் கோடு, பரமத்தி வேலூர், குமார பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட பட்டாசுக் கடை உரி மையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டத்திலும் விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் குறித்து, பட்டாசு விற்பனையாளர்களுட னான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இதற்கிடையே, சேலத்தில் கடந்த இரு தினங்களாக பட் டாசுக் கடைகளில் மாவட்ட ஆட்சி யர் அதிரடி சோதனை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் காரைக் குடி பகுதியில் உரிய அனுமதி இன்றி வீட்டில் பதுக்கி வைத்தி ருந்த 2.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!