குவைத்திலிருந்து இருவர் மீட்பு

சென்னை: குவைத்தில் வேலையின்றித் தவித்த இருவரை இந்திய தூதரக அதிகாரிகள் மீட்டு சென்னை அனுப்பி வைத்துள்ளனர். விழுப்புரம், கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த ஜெயகுமாரும், 31, கர்நாடகாவைச் சேர்ந்த இப்ராகிம் என்பவரும் ஓட்டுநர் வேலைக்காக குவைத் சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சம்பளம் கேட்டு எதிர்த்துப் பேசியதால் இருவரும் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் தொடுத்த நீதிமன்ற வழக்கிலும் பயன் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலையில் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து குவைத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவரையும் மீட்டு சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இப்ராகிம், ஜெயகுமார். படம்: இந்திய ஊடகம்