பணத்தை மாற்றச் சென்ற பெண் மரணம்

கோரக்பூர்: தான் வைத்திருந்த இரு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றமுடியாத அதிர்ச்சியில் உ.பி. மாநிலப் பெண் ஒருவர் வங்கி வாசலிலேயே மரணம் அடைந்தார். கு‌ஷிநகர் மாவட்டம், கோரக்பூரைச் சேர்ந்தவர் தித்ரஜி, 40, சலவைத் தொழிலாளி. படிப்பறிவு இல்லாத தித்ரஜி, கோரக்பூரில் உள்ள வங்கிக்குச் சென்று இரு 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிவர முயன்றபோது, பணத்தை இரு நாட்களுக்கு மாற்றமுடியாது என்று கூறியுள்ளனர்.

இதனைத் தவறாகப் புரிந்துகொண்ட தித்ரஜி வங்கியில் இருந்து சோகத்திலும் விரக்தியிலும் வெளியேறிய நிலையில் வங்கி வாசல் அருகே வரும்போது மாரடைப்பு ஏற்பட்டு, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வங்கி வாசலிலேயே மரணமடைந்தார். அவரது கையில் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள், பாஸ்புக் அவர் அருகில் சிதறிக் கிடந்தன. கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் குஷாங்கர் சாம்பு குமார் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!