கச்சத்தீவு விழாவில் பங்கேற்போம்: ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு

ராமேசுவரம்: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று மத் திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு செல்வதற்கு தமிழக மீனவர்களுக்கு எப்போதுமே உரிமை உண்டு என்றும் தேவாலய விழாவில் பங்கேற்கப்போவதாகவும் ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என்று இந்திய அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார். “கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவுக்கு சென்று அந்தோணியார் ஆலய விழாக்களில் கலந்துகொள்கிறோம். எனவே, சிறுபான்மை சமுதாய மக்களின் மனதைப் புண்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை முறியடிப்போம்,” என்றார் ஜேசுராஜா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹைதராபாத்தில் ஒரே பாதையில் நேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதிக் கொண்டதில் ஆறு பயணிகள் காயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. படம்: இந்திய ஊடகம்

12 Nov 2019

ஹைதராபாத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்