வங்கியில் பணமில்லை: மக்கள் சாலை மறியல்; பேருந்துகள் சிறைபிடிப்பு

தி.மலை: ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு நீடித்து வருவதால் தேவையான அளவு பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் மக்கள், ஆங்காங்கே அரசுப் பேருந்து களைச் சிறைபிடித்து போராட்டம் நடத்தத் துவங்கியுள்ளனர். ரூபாய் நோட்டுகள் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையால் பல்வேறு தரப்பினரும் தொடர் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார் கள். இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல், பேருந்து சிறைபிடிப்பு எனப் போராட்டங்கள் நடத்துகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை யில், கடந்த இரு தினங்களாக பணம் இல்லை. இதனால் அப் பகுதி மக்கள் பணம் எடுக்க முடியாமல் பெரும் ஏமாற்றமடைந்த னர். இந்நிலையில் வியாழக்கிழமை யன்று பொறுமையிழந்த இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வங்கி முன் மறியலில் ஈடுபட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!